×

காங்கிரஸ் கட்சி மேலும் ரூ.1745 கோடி வருமான வரி செலுத்துமாறு கூறி வருமானவரித்துறை புதிய நோட்டீஸ்

டெல்லி: காங்கிரஸ் கட்சி மேலும் ரூ.1745 கோடி வருமான வரி செலுத்துமாறு கூறி வருமானவரித்துறை புதிய நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏற்கனவே 5 நிதியாண்டுகளுக்கு ரூ.1823 கோடி வரி செலுத்தக்கோரி நோட்டீஸ் அனுப்பிய நிலையில் வருமானவரித்துறை புதிய நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2014-15 முதல் 2016-17 வரை 3 நிதியாண்டுகளுக்கு ரூ.1745 கோடி வரி பாக்கி இருப்பதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மக்களவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் காங்கிரஸ் வருவாய் தொடர்பாக மறுமதிப்பீட்டு நடவடிக்கையை வருமான வரித்துறை மேற்கொண்டு வருகிறது. இது தேர்தலை சந்திக்க விடாமல் தங்களை முடக்கும் நடவடிக்கையாக இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடி ரூபாய் வரி பாக்கி உள்ளதாக கூறி வருமான வரித்துறை வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த 1,700 கோடி ரூபாய் என்பது 2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையிலான 4 ஆண்டுகளில் வருமான வரி நிலுவை, அபராதம், வட்டி ஆகியவற்றின் மொத்த தொகை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ரூ.14 லட்சத்திற்கான வரியை தாமதமாக செலுத்தியது தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு சில நாட்களுக்கு முன்பாக 210 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

அத்துடன் 4 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு, பிறகு அந்த கணக்குகளை தீர்ப்பாயத்தின் தலையீட்டால் நிபந்தனையுடன் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. மற்றோரு புகாரில் காங்கிரசின் 4 வங்கி கணக்குகளில் இருந்து 135 கோடி ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டது. இந்த நடவடிக்கைகளை இரண்டாவது முறையாக அமெரிக்கா கண்டித்த சூழலில் தற்போது ரூ.1,700 கோடி ரூபாய் வரி பாக்கி என்று கூறி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸ் போதிய ஆதாரங்கள் ஏதும் இல்லாமல் அனுப்பப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சி மேலும் ரூ.1745 கோடி வருமான வரி செலுத்துமாறு கூறி வருமானவரித்துறை புதிய நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏற்கனவே 5 நிதியாண்டுகளுக்கு ரூ.1823 கோடி வரி செலுத்தக்கோரி நோட்டீஸ் அனுப்பிய நிலையில் வருமானவரித்துறை புதிய நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2014-15 முதல் 2016-17 வரை 3 நிதியாண்டுகளுக்கு ரூ.1745 கோடி வரி பாக்கி இருப்பதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. வருமான வரி கணக்கை மறுமதிப்பீடு செய்ய தடை கோரி தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வருமான வரித்துறை நோட்டீஸ் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுக காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.

The post காங்கிரஸ் கட்சி மேலும் ரூ.1745 கோடி வருமான வரி செலுத்துமாறு கூறி வருமானவரித்துறை புதிய நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Congress party ,Income Tax Department ,Delhi ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ்...